Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Nenjathile »

Nenjathile

Movie: Pirivom Santhippom

பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே
பெண் : முத்தத்திலே ஓசை இல்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே
ஆண் : வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே
பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே

ஆண் : நீ பேசியும் நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பெண் : பொழுதுகள் தீரலாம் மாறாதென்றும் இனிமைகள்
ஆண் : இனிமைகள் முளைத்தன ஆதாம் ஏவாள் தனிமையில்
பெண் : தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இளவெயில்
ஆண் : வெயில் சாரல் அடிக்கும் நிழல் கூடி அணைக்கும்
பெண் : அணைக்கும் ஆசை ஆயிரம்... களைக்கும் பாஷை பாசுரம்
ஆண் :சுரம் ஏழிலும் சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே

பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே

பெண் : வா என்பது போ என்பது காதல் மொழியில் ஒரு பொருள்
ஆண் : ஒரு பொருள் தருவதால் நீயும் நானும் மறைபொருள்
பெண் : பொருள் வரும் புகழ் வரும் ஆனால் வாழ்வில் எது சுகம்
ஆண் : சுகம் தரும் சுவை தரும் காதல் போல எதுவரும்
பெண் : வரும் வார்த்தை தயங்கும் நம்மை பாத்து மயங்கும்
ஆண் : மயங்கும் மாலை சூரியன் கிறங்கும் நாளும் ஐம்புலன்
பெண் : புலன் ஐந்திலும் திசை நான்கிலும் தேடும் இன்பம் நெஞ்சத்திலே

ஆண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே
பெண் : ஓ...ஓ.....மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே
ஆண் : முத்தத்திலே ஓசை இல்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே
பெண் : வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே



Views: 2667
Date added: 03 March, 2008
Lyrics:
Title Views
» Kanden Kanden
4392
» Medhuvaa Medhuvaa
3870