Lyrics Menu

Song Name

Movie Name

submit your favorite lyric to us

Search by:

« Song - Vanna Thamil »

Vanna Thamil

Movie: Paavai Vilakku

பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கன்னல் மொழி... ஈ..ஈ.... பேசி வரும்...
கன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

Views: 5758
Date added: 31 March, 2006
Lyrics:
Title Views
» Kaaviyama
5368
» Nee Sirikka
4191