Lyrics Menu

Song Name

Movie Name

submit your favorite lyric to us

Search by:

« Song - Siru Paarvaiyaale »

Siru Paarvaiyaale

Movie: Bheema

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

நீ தூரப்பச்சை என் நெடுனாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே
தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் இடவா

உதைக்கும் அலைகளிலே மிதக்கும் படகெனவே
மறைக்கும் முகிலிடையே சிரிக்கும் முழு நிலவே
அடக்கம் தடுக்கிறதே அடக்கி பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே நொறுங்கி உடைகிறதே
உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டி பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை என்னை தேடி வந்தாய் பாராட்ட
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுனாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே

சிலிர்க்கும் செடிகளிலே துளிக்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே கிடைக்கும் முதற்சுவையே
விழுந்தேன் இரவினிலே மிதந்தேன் கனவினிலே
கனவில் நீ இருந்தாய் மறந்தேன் வெளிவரவே
ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே
நீ கொஞ்சும் போது கொல்லும் நஞ்சு
ஆனால் கூட அள்ளி உண்பேனே
ஆ..ஆ..ஆ..அடீ... பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுனாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே
தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் இடவா

Views: 5383
Date added: 11 March, 2008
Lyrics:
Title Views
» Enadhuyirae
12405
» Oru Mugamo Irumugamo
4560