Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Akkam Pakkam »

Akkam Pakkam

Movie: Kireedam

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி..
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒண்ணு கலக்கின்றதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னாலின்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

நானா... நானா.. நானா நானா...
நானா... நானா.. நானா நானா...



Views: 12241
Date added: 16 November, 2007
Lyrics: