« Song - Enaku Piditha Paadal »
|
 | Enaku Piditha Paadal
Movie: Juli Ganapathy
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயை கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா
சரணம் :
மெல்ல நெருங்கும் போது நீ தூரம் போகின்றாய்
விட்டு விலகும் போது நீநெருங்கி வருகின்றாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஒர் காத்தாடியாகிறேன்
சரணம் :
வேலி கம்பிகளை போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர் துளி தீண்டினால் நீ தொட்ட ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தீன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைகிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்
Views: 6987 Date added: 04 November, 2006 Lyrics: | |
|
|
| |