Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - En Kaathal Solla »

En Kaathal Solla

Movie: Paiyaa

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி...(1)

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி(2)

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(1)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
இந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
இந்த நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(1) (2)



Views: 3842
Date added: 20 November, 2017
Lyrics: