« Song - Kannamma Kannamma »
|
 | Kannamma Kannamma
Movie: Rekka
ஆ…
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை(1)
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக் குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே(2)
ஒளி வீசும் மணி தீபம் அதுயாரோ - நீ
1.
செம்பருத்தி பூவைப் போல சிநேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே
கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா
உன்னை உள்ளம் எண்ணுதம்மா
1.
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண் அளந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதானென வாயார போற்றுவான்
கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா
வெட்கம் வெட்டி தள்ளுதம்மா
1. 2.
Views: 2546 Date added: 17 November, 2017 Lyrics: | |
|
|
| |