Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Kangal Irandaal »

Kangal Irandaal

Movie: Subramaniyapuram

ஆண்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்... இழுத்தாய்...
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்.....

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்... இழுத்தாய்...
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்.....

பெண்: பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதும் என நான்...
நினைத்தே நகர்வேன்;
ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண்: இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா..
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா...

பெண்: மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே...
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆண்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்... இழுத்தாய்...
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்.....


பெண்: திரைகள் அண்;டாத காற்றும் தீண்;டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

ஆண்: உனையன்றி வேறோரு நினைவில்லை
இனி இந்த ஊண்; உயிர் நினைவில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

பெண்: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண்: பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதும் என நான்...
நினைத்தே நகர்வேன்;
ஏமாற்றி

பெண்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்... இழுத்தாய்... போதாதென

ஆண்: சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்.....



Views: 29563
Date added: 27 July, 2008
Lyrics: