« Song - Kaadhalae Nee Ennodu »
|
 | Kaadhalae Nee Ennodu
Movie: Nenjathai Killathe
காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே
காலமெல்லாம் உன்னை நான் தேடச் செய்யாதே
நான் ஒரு சேவகன் காதலின் காதலன்
யாரிடம் நான் உனை தேடுவேன் காதலே...
காதலே நீ...
தூங்கும் போதும் யோசிப்பேன்
தூங்காது உனை நான் நேசிப்பேன்
உண்ணும் போதும் உன்னையே
உண்ணவே நான் யாசிப்பேன்
போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை
பிடித்தபடியே நான் நடக்கிறேன்
என்னக் கோபமோ கண்ணை கட்டி நீ
உன்னைத் தேடவே சொல்கிறாய்
காதலே நான் ஒரு காதலின் தூதுவன்
நீ எனை காதலி காதலே வாழுவாய்...
காதலே நீ...
காதலே உன் வாசலில் மொழிகள்
யாவும் மௌனமே
பேசுகின்ற வார்த்தையோ நானத்தாலே விலகுமே
யாருமில்லையே என்ற போதிலும்
வரம்பு மீறியதில்லையே
காதலாகினோம் கசிந்தும் உருகினோம்
கரங்கள் தீண்டியதில்லையே
ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே
யாருமே என்னைப் போல் காதலன் இல்லையே...
காதலே நீ...
Views: 14010 Date added: 27 July, 2008 Lyrics: | |
|
|
| |