« Song - Kallai Mattum Kandal »
|
 | Kallai Mattum Kandal
Movie: Dasavatharam
ஓம்.... நமோ நாராயணாய....
குழு: ஓம் வழி வாசல் வாழ் சுடலாழியும்
பல்லாண்டு படைத்தோர்க்கு உதவும்
பாஞ்சசன்யம் பல்லாண்டு
(கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது)... 2
எட்டில் ஐந்து எண் கழியும் - என்றும்
ஐந்தில் எட்டு எண் கழியாது
அஷ்ட அச்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச ஆச்சரம் பார்க்காது
ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்
குழு: மந்திரமில்லை வணங்கனும் பக்தர்கள்
மஞ்சனத்துளி அகல
உன் இச்சை மண்டபத்துக்குள்ளே
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
நல்லாண்ட விண்ணோர்கள் மன்னர் முன்
செவ்வரளி செவ்வித்திருக்காப்பு
ஓம் ஓம்
(இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது)... 2
வீர சைவர்கள் முன்னால் - எங்கள்
வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி - என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலஷ்மி நாகர் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது)... 2
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
Views: 16167 Date added: 27 July, 2008 Lyrics: | |
|
|
| |