Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Mathana Manmathanaa »

Mathana Manmathanaa

Movie: Boys & Girls

மதனா... மன்மதனா
மதனா என் மதனா
உன் கண்கள் பார்க்க இவள் கண்ணாடி
உன் மோகம் தீர்க்க இவள் சரி ஜோடி
இந்த பூமி எங்கும் தினம் தேடி பார்க்கையிலே
உன் போல் யார் அழகிய..
மதனா... மன்மதனா..
மதனா என் மதனா...

இரண்டு கண்ணில் உன்னாலே
வேறு பார்வை, கண்ணீர் இல்லை
உன்னை தொட்ட பின்னாலே என்னை நானே தீண்டவில்லை
யாரும் இல்லா நேரத்தில் ஈர முத்தம் தந்தாலென்ன
போர்த்தி வைத்த ஆடைக்குள்
போர்த்திக்கொள்ள வந்தாலென்ன
தித்திக்கின்ற தீபம் நீதான்
தேகம் எங்கும் தீயை மூட்டு
காதல் என்னும் கவிஞன் நான் தான்
கண்ணா நீ என் கவிதை நோட்டு
குட்டி குட்டி விண்மீன் சேர்த்து
கூரு கட்டி நிலவு செய்வோம்
வெள்ளை நிலவை சாட்சி வைத்து
வேர்வை மழையில் சேர்ந்து குளிப்போம்

மதனா... மன்மதனா..
மதனா என் மதனா...

பெண்மை என்னும் வார்த்தைக்கு
ஆண்மை தானே அர்த்தம் என்பேன்
காதல் என்னும் வீட்டுக்கு
கண்கள் தானே வாசல் என்பேன்
மழலை என்னும் பொம்மை நீ
மார்பில் வைத்து அணைப்பேன் உன்னை
மண்ணில் செய்த சிற்பம் நீ
மழையை போல பொழிவேன் உன்மேல்
வெட்கம் இல்லா ரோஜா பூவை
முட்களினாலே கீற வேண்டும்
தேடி தேடி இன்பம் கண்டு
தேவை யாவும் தீர வேண்டும்
காதல் வந்த பின்னே அன்பே
வானம் பூமி தூரமில்லை
நாடு முழுக்க தேடி பார்த்தேன்
நம்மை போல யாரும் இல்லை

மதனா... மன்மதனா..
மதனா என் மதனா...
உன் கண்கள் பார்க்க இவள் கண்ணாடி
உன் மோகம் தீர்க்க இவள் சரி ஜோடி
இந்த பூமி எங்கும் தினம் தேடி பார்க்கையிலே
உன் போல் யார் அழகிய..
மதனா... மன்மதனா..
மதனா என் மதனா...



Views: 5043
Date added: 03 August, 2007
Lyrics: