Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Oru Maatram »

Oru Maatram

Movie: Naalai

ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்
நடை மாற்றம் உடை மாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
நடந்து போகும் பாதையில்
இரண்டு பக்கம் பூமரம்

மழையும் வெயிலும் கலந்த பின் வானவில்லாய் மாறிடும்
உலகமே புதிதாய் தோன்றும் ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்
நடை மாற்றம் உடை மாற்றம்

நேற்று வரை ... நேற்று வரை வானத்தை நீ
நிமிர்ந்து பார்க்க நேரமில்லை
கண்கள் மூடி பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை
முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே
மூச்சு காற்று மொத்தத்திலே
அர்த்தம் இங்கு புரிகிறதே.. புரிகிறதே
ஓஓ..ஓஓ..ஓஓ...
ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்

பூமியிலே .. பூமியிலே யாருமே
தனியாக பிறப்பதில்லை
வழித்துணையும் வருகையிலே
பயணங்கள் மறப்பதில்லை
கட்டாந்தரையில் நின்றவொரு
காலடை சுவடு தெரிகிறதே
வெட்ட வெளியில் திரிந்த பின்னே
வீட்டின் அருமை புரிகிறதே... புரிகிறதே
ஓஓ..ஓஓ..ஓஓ...
ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்
நடை மாற்றம் உடை மாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்



Views: 4748
Date added: 09 April, 2007
Lyrics: