Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Pombalanga »

Pombalanga

Movie: Unnai Ninaithu

பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்து மனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே
அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையைக் காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளையெல்லாம் தீவரவாதி... (பொம்பளைங்க...)

பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வச்சாங்க
அப்பூமி கல்லாவே இருப்பதனால
பெண்ணெல்லாம் நதியின்னு புகழ்ந்து வச்சாங்க
ஆணெல்லாம் அதில் வீழ்ந்து மூழ்குவதால
நம்பிவிடாதே பெண்ண நம்பிவிடாதே... (பொம்பளைங்க...)

பெண்ணால வைத்தியமா போனவன் உண்டு
இங்கு ஆண்களால பைத்தியமா ஆனவள் உண்டா?
பெண்ணால காவி கட்டி நடந்தவன் உண்டு
இங்கு ஆண்களால காவி கட்டு நடந்தவள் உண்டா?
பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சாண்டா
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?
நம்பிவிடாதே பெண்ண நம்பிவிடாதே... (பொம்பளைங்க...)

பெண்கள் எல்லாம் பரிட்சையில முதலிடந்தாங்க
நம்ம பசங்களத்தான் எங்க அவங்க படிக்க விட்டாங்க
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியத்தான் முளைக்க வைச்சாங்க
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகி வந்தாங்க
ஆணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க
நம்பிவிடாதே பெண்ண நம்பிவிடாதே... (பொம்பளைங்க...)



Views: 5341
Date added: 14 November, 2006
Lyrics:
Title Views
» Yaar Intha Theyvathai
9090