Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Nenjam Oru Murai »

Nenjam Oru Murai

Movie: Vaseegara

பெண்:
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் ஒரு நொடி பார் என்றது,

[குழு]

ரெண்டு கரங்களும் சேர் என்றது,
உள்ளம் உனக்குத்தான் என்றது,
சத்தம் இன்றி உதடுகளோ முத்தம் எனக்குதா என்றது,
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது,
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,

ஆண்:
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் பரிசம்,

பெண்:
கன்னம் என்னும் தீயனைப்புத் துறையில்,
உன் முத்தம் தானே பற்றிக் கொண்ட முதல் தீ,

ஆண்:
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ,

பெண்:
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலனம்,

ஆண்:
அன்பே என்றும் நீ அல்லவா,
கண்ணால் பேசும் முதல் கவிதை,

பெண்:
காலம் உள்ள காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை,

ஆண்:
நெஞ்சம்ஒருமுறைநீஎன்றது,

பெண்:
கண்கள்மறு முறைபார்என்றது,

ஆண்:
காதல் என்றால் அது பூவின் வடிவம்,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்,

பெண்:
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்

ஆண்:
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே
ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்,

பெண்:
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்,
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்,

ஆண்:
இந்த காதல் வந்தால் இலை கூட மாலை சுமக்கும்,

பெண்:
காதல் என்ற வார்த்தையிலே,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்,
காதல் என்ற காற்றினிலே,
தூசி போல நாம் அலைவோம்,

ஆண்:
நெஞ்சம்ஒருமுறைநீஎன்றது,

பெண்:
கண்கள் மறு முறை பார் என்றது,

ஆண்:
ரெண்டு கரங்களும் சேர் என்றது,

பெண்:
உள்ளம் உனக்குத்தான் என்றது,

ஆண்:
சத்தம் இன்றி உதடுகளோ முத்தம் எனக்குத்தா என்றது,

பெண்:
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது....



Views: 6305
Date added: 04 November, 2006
Lyrics:
Title Views
» Vaenaa Vaenaa
6682