Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Ondraanavan »

Ondraanavan

Movie: Thiruvilaiyadal

வாசி வாசி என வாசித்த தமிழின்று
சிவா சிவா என சிந்தைதனில் நின்று
அவாவினால் அவ்வை தமிழ் கொண்டு
கவி பாடினால் உன்னை கண்குளிரக் கண்டு

அவ்வையே ஒன்று இரண்டு மூன்று என எமை வரிசைப் படுத்திப் பாடு

ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்

நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசைச் ஸ்வரங்களில் ஏழானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசைச் ஸ்வரங்களில் ஏழானவன்

சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச மொட்டானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச மொட்டானவன்

பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்

முத்தானவன் மூல முதலானவன்
முத்தானவன் மூல முதலானவன்

முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆண்பாதி பெண்பாதி என்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
ஆண்பாதி பெண்பாதி என்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்

தான்பாதி உமைபாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்
தான்பாதி உமைபாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்

காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெரூப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பர் உளம்தன்னில் நின்றானவன்



Views: 3283
Date added: 04 November, 2006
Lyrics:
Title Views
» Paatum Naane
15996