Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Muthal Muthal Paarthen »

Muthal Muthal Paarthen

Movie: priyasakhi

பெண் :
முதல் முதல்.. பார்த்தேன் உன்னை...
முழுவதும் இழந்தேன் என்னை...

எனக்குள்ளே இன்று புது வித மோகம்
இதன் பெயர் தானா உலகத்தில் காதல்..
நான் சுவாசிக்கும் காற்றை நேசித்து நீ
அதை சுவாசிக்க வேண்டுமடா....
எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு...

முதல் முதல் பார்த்தேன் உன்னை..
முழுவதும் இழந்தேன் என்னை...

( இசை)

மேகம் மட்டும் சுவராகும்
குளியலறை நான் கேட்பேன்
உனது கண்கள் மட்டும் காண சின்ன
துவாரம் அதில் வைப்பேன்
நூற்றி எட்டு வின்மீனை ஒன்று
சேர்த்து நீ கட்டு
எந்தன் காலில் கொழுசு போல
கட்டு விட்டு தாலாட்டு..

அட மயிலின் இறகால் செய்த
ஒரு காலணி நானும் கேட்பேன்
அட இரவினில் ஓடா கடிகாரம்தான்
வீட்டில் வேண்டுமே...
என்னை கேட்டுத்தான் நீயும் மூச்சு விடனுமே...ஏஏஏஏ
கேட்டிடாமலே என்னை நீயும் தொடனுமே..ஏஏஏ

முதல் முதல் பார்த்தேன் உன்னை..
முழுவதும் இழந்தேன் என்னை..

(இசை)

வேலை நேரம் நீ சென்றால்
மோக நேரம் நான் கொண்டால்
ஒற்றை முடியில் கட்டி வைப்பேன்
வெளியில் போக கூடாது..

சின்ன சின்ன முத்தத்தை
சமைத்து நானும் தருவேனே
வெட்க்கம் தொட்டு.. கூச்சம் தொட்டு..
முத்த உணவு திண்போமா...
அட எண்ணை நுரையை அள்ளி
பூ மெத்தை செய்ய சொல்லி
நான் போதும் போதும் என்னும் வரையில்
மோகம் வேண்டுமே..
மீசை குத்தியே ஆசை காயம் செய்யடா...
இன்ப காயத்தில் நீயும் எச்சில் தடவடா.....

முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை..

(இசை)

எனக்குள்ளே இன்று புது வித மோகம்
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்
நான் சுவாசிக்கும் காற்றை நேசித்து நீ
அதை சுவாசிக்க வேண்டுமடா...
எனது பெயருக்கே உன்னை எழுதித் தந்திடு..

முதல் முதல் பார்த்தேன் உன்னை..
முழுவதும் இழந்தேன் என்னை...



Views: 3985
Date added: 04 November, 2006
Lyrics: