« Song - Ravivarman Ezhuthaatha »
|
 | Ravivarman Ezhuthaatha
Movie: Vasanthi
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
விழியோர சிறு பார்வை போதும்
நாம் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாற மணப்பந்தலாகும்
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூத்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போலுன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
Views: 3686 Date added: 12 September, 2006 Lyrics: | |
|
|
| |