Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Poo mudippal »

Poo mudippal

Movie: Nenjirukkum Varai

பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னம் பேரெழுதி
பார்வையிலே மன்னம் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

( நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் இருபதாம் நாள்... திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும், நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன் .... தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.
மாதனார் தங்கள் மகளென்று பார்த்திருக்க... மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க... காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர.... கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர... காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க... ஆனத்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க.... கொட்டியது மேளம்.........குவிந்தது கோடி மலர்... கட்டினான் மாங்கல்யம்....... மனை வாழ்க துணை வாழ்க...... குலம் வாழ்க.........)

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூமுடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....



Views: 6173
Date added: 31 March, 2006
Lyrics:
Title Views
» Oru Murai Piranthen
42963